×

கிரிக்கெட்டை விட உயிர் முக்கியம் – ஜாவித் மியான்தத்

கராச்சி: பாகிஸ்தான் சூப்பர் லீக்(பிஎஸ்எல்) போட்டியின் 6வது தொடர் பிப்ரவரி மாதம் தொடங்கியது. தொடரில் பங்கேற்ற 7 வீரர்களுக்கு ெகாரோனா தொற்று  ஏற்பட்டதால் மார்ச் முதல் வாரத்தில் தொடர் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நிறுத்தப்பட்ட நடப்புத் தொடரின் எஞ்சிய 20 ஆட்டங்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்(பிசிபி) ஆலோசித்து வருகிறது. அதற்கான பணிகளை தொடங்கியுள்ள நிலையில்  இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் வர அமீரகம் தடை விதித்துள்ளது. இந்த தடை இன்று அமலுக்கு வருகிறது. இந்நிலையில் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்தத், ‘இந்த நெருக்கடியான காலத்தில், கிரிக்கெட் விளையாடுவதை விட உயிர்களை காப்பாற்றுவதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். பிசிபி தனது சொந்த வருவாய் லாபங்களை கருத்தில் கொண்டு, வீரர்களின் உயிரை பணயம் வைக்கின்றனர். எஞ்சிய போட்டிகளை நடத்துவதின் மூலம்  எதாவது பிரச்னை ஏற்பட்டால் யார் பொறுப்பு’ என்று கடுமையாக சாடியுள்ளார். …

The post கிரிக்கெட்டை விட உயிர் முக்கியம் – ஜாவித் மியான்தத் appeared first on Dinakaran.

Tags : Javid Miandat ,KARACHI ,Pakistan Super League ,PSL ,Ekarona ,Dinakaran ,
× RELATED வீட்டு காவலில் இருந்த இம்ரான்கானின் மனைவி சிறைக்கு மாற்றம்